பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடக பேச்சாளரான ரோசி சேனாநாயக்கவின் மகள் திஸக்யா மாயா சேனாநாயக்கவின் திருமண நிகழ்வில் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அவமதிக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வைபவத்தில் திருமண ஜோடியினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவமதிக்கப்பட்டமை தொடர்பில் அதிகம் பேசப்பட்டுள்ளது.
குறித்த திருணம நிகழ்வு கடந்த 23ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது. இதில் ரோசியின் மகள் முன்னாள் இராணுவ தளபதியான ஜேரி சில்வாவின் மகளான லக்ஷிகாவின் மகன் ஷாலகவை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
திஸக்யா மற்றும் ஷாலக தங்கள் திருமண நிகழ்விற்கு வருகைத்தந்திருந்த விருந்தினர்களை தங்களின் மேசைக்கு சென்று வரவேற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமர்ந்திருந்த மேசைக்கு சென்று இரண்டு கைகளை கூப்பி ஜனாதிபதிக்கு மாத்திரம் வணக்கம் கூறி வரவேற்றுள்ளனர்.
அவ்வாறு ஜனாதிபதியை மாத்திரம் வரவேற்ற அவர்கள் அடுத்த மேசையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதங்களை பிடித்து ஆசி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி வருத்தமடைந்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் இராணுவ தளபதியான ஜெரி சில்வாவின் மகளான லக்ஷிகா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினராகும்.
இலங்கையில் இடம்பெற்ற 2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டின் அரச தலைவர்கள் கூட்டத்தின் ஏற்பாடு நடவடிக்கை மேற்கொண்டு, முன்னாள் கண்கானிப்பு உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, திஸக்யா மாயா சேனாநாயக்கவை அதன் ஏற்பாட்டு நடவடிக்கைக்காக இணைத்துக் கொண்டுள்ளனர்.
எப்படியிருப்பினும் ரோசி சேனாநாயக்கவின் மகள் தற்போது வரையில் அரசாங்க நிறுவனம் ஒன்றில் இயக்குனராக செயற்படுகின்றார்.