பொலிஸ்மா அதிபருக்கு எதிராக என்ன செய்யலாம்..? கம்மன்பில ஆலோசனை!

பொலிஸ்மா அதிபர் தனியார் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காவிட்டால் என்ன செய்யலாம் என்று பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர்,

மக்கள் சேவையில் ஈடுபடுபவர் என்ற வகையில் அரச ஊடகங்களுக்கு வழங்கும் செய்தியை தனியார் ஊடகங்களுக்கும் வழங்க கட்டுப்பட்டுள்ளார்.

அரச ஊடகங்களளுக்கு வழற்கும் தகவல்களை பொலிஸ்மா அதிபர் தமக்கு வழங்குகிறார் இல்லை என்று அரசியல் அமைப்பில் 12 (1) அத்தியாயத்தின்கீழ் தனியார் ஊடகங்கள் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யலாம்.

அவ்வாறு தாக்கல் செய்தால், அரச ஊடகங்களுக்கு வழங்கும் அனைத்து தகவல்களையும் தனியார் ஊடகங்களுக்கும் வழங்க வேண்டும் என பொலிஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும்.

ஊடகவியலாளர் எவராவது உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தால் சட்ட உதவிகளை வழங்க எம்மால் முடியும் என்று தெரிவித்துள்ளார்.