ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவதை நிறுத்துவதை விட, பொலிஸ் மா அதிபர் ஊடகங்களிடம் கவனமாக உரையாட வேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையத்தால் தினசரி அனுப்படும் செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு அனுப்புவதை நிறுத்தமாறு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியாலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே ஹந்துன்நெத்தி எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.