வவுனியாவில் வாகன விபத்து : மூவர் பரிதாபகரமாக பலி!

வவுனியா – ஈரப்பெரியகுளம் பகுதியில் பாரவூர்தியொன்று கெப்ரக வாகனம் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 58, 53, 32 வயதுகளையுடைய ஒரு ஆணும், இரு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

30 வயதினையுடைய முகமத் சுது என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் கெப்ரக வாகனத்தில் பயணித்தவர்களே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இறந்தவர்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதும் அவர்களது பெயர் விபரங்களை உடனடியாக பெற முடியவில்லை.

இதேவேளை, இறந்தவர்கள் பயணித்த வாகனத்தில் வைத்தியசாலைக் குறியீடு பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரம்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.