கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். டிசம்பர் 30ந்தேதி வரை வங்கிகளில் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றார். இந்த அறிவிப்பால் பணத்தட்டுபாடு ஏற்பட்டது.
இதனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இத்திட்டத்தை கொண்டு வந்த மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.
இத்திடத்தை அறிவித்த மோடி 50 நாட்கள் காத்திருங்கள், அதன்பின் விளக்க அளிக்கிறேன் என்றார். ஐம்பது நாளிற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன.
இந்நிலையில் இந்த திட்டத்திற்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து டிசம்பர் 27-ம் தேதி(இன்று) பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்து, அதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது.
முன்னதக, இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பங்கேற்பதாகவும், இடது சாரிகள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாகவும் தெரிவித்து இருந்தன.
இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், “கடந்த 5-6 பாராளுமன்ற தொடர்களில் தேசிய வாத காங்கிரஸ் கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளுன் துணை நின்றது. ஆனால் சமீபத்தில் காங்கிரஸ் மற்ற கட்சிகளை விடுத்து தனியாக சென்று பிரதமரை சந்தித்தது.
செய்தியாளர் சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கேற்காது. இருப்பினும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இருந்து தெளிவான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்” என்றார்.