ஜெயலலிதாவுக்கு பின் நாங்கள் தான்: தமிழிசை தடாலடி!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப பாஜக கட்சியால் மட்டுமே முடியும் என பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவிற்கு இணையான தலைவர்கள் அதிமுக கட்சியில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இல்லை.

இதனால் அவரின் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே கட்சி பாஜகதான் என தெரிவித்துள்ளார். மேலும் பணத்திற்காக மக்கள் வங்கிகளில் காத்திருப்பதற்கு பிரதமர் மோடி காரணமில்லை, கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் தான் காரணம் என கூறியுள்ளார்.