போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்த நடிகர் அஜித்! காரணம் என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவை நடிகர் அஜித் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

ஜெயலலிதா மறைவடைந்த போது நடிகர் அஜித் பல்கோரிய நாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். இதனால் அவரால் உடனடியாக ஜெயலலிதாவை பார்க்க வரமுடியவில்லை.

பின்னர் பல்கோரியாவில் இருந்து திரும்பிய அஜித், விமான நிலையம் வந்திறங்கியதும் நேரடியாக ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் இன்று அஜித் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பலவிதமாக பேசப்படும் அதே நிலையில், இது மரியாதை நிமித்தமானது எனவும் கூறப்படுகிறது.