ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிக்கையை முன்னிட்டு கடைகள் போடப்பட்டிருந்த பகுதிக்குள் கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு லாரி ஒன்று அதிவேகமாக புகுந்தது.
இந்த தாக்குதலில் 12 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இந்த விபத்தில் 48க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அனிஷ் அம்ரி என்பரை ஜெர்மன் போலீசார் தேடி வந்தனர். அனிஷ் பெர்லினில் இருந்து பாரிஸ் நாட்டிற்கும், பின்னர் அங்கிருந்து இத்தாலிக்கும் தப்பித்து சென்றதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் கண்காணிப்பு கேமரா ஒன்றில் அனிஷ் அம்ரியின் முகம் பதிவாகி உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, குற்றவாளி அனிஷ் பெர்லின் நகரில் இருந்து பிரான்ஸுக்கும் பின்னர் இத்தாலிக்கும் தப்பித்து செல்ல முடிந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளி அனிஷுக்கு தாக்குதலுக்கு முன்பு அல்லது பின்பு எப்பொழுது உதவி கிடைத்தது என்பது குறித்து ஜெர்மன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, அனிஷ் அம்ரி, இத்தாலி நாட்டின் மிலன் என்ற பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.