27-ந் தேதி (செவ்வாய்) :
* மாத சிவராத்திரி.
* சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
28-ந்தேதி (புதன்) :
* அமாவாசை.
* அனுமன் ஜெயந்தி.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பூர்ணாபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (வியாழன்) :
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மதுரை நவநீதி கிருஷ்ண சுவாமி கோவில் ஆகிய தலங் களில் பகற்பத்து உற்சவம் ஆரம்பம்.
* சகல விஷ்ணு ஆலயங் களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் தொடக்கம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார், பட்டர் திருமாளிகைக்கு எழுந்தருளி, கோபால விசாலத்தில் திருப்பல்லாண்டு தொடக்கம். பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
30-ந்தேதி (வெள்ளி) :
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார், மதுரை கூடலழகர், திருமாலிஞ்சோலை கள்ளழகர், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திரு அத்யன மண்டபம் எழுந்தருளி, திருப் பாவாடை கோஷ்டி அருளல்.
* கீழ்நோக்கு நாள்.
31-ந்தேதி (சனி) :
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திரு அத்யன மண்டபம் எழுந்தருளி, அரையர் சேவை.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வேணுகான கண்ணம் அலங்காரம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார், மதுரை கூடலழகர், கரூர் ரெங்கநாதர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங் களில் பகற்பத்து உற்சவ சேவை.
* மேல்நோக்கு நாள்.
1-ந்தேதி (ஞாயிறு) :
* ஆங்கில புத்தாண்டு பிறப்பு.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் பகற்பத்து சேவை.
* ஆவுடையார் கோவிலில் மாணிக்கவாசகர் பவனி வருதல்.
2-ந்தேதி (திங்கள்) :
* சதுர்த்தி விரதம்
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி.
* சிதம்பரம் நடராஜர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சங்கரன்கோவில், குற்றாலம் ஆகிய தலங்களில் சிவபெருமான் விழா தொடக்கம்.