இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி. உத்தர பிரதேசம் மாநிலத்தில் பிறந்த இவர், மேற்கு வங்காள அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்துள்ள இவர், அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். ரிவர்ஸ் ஸ்விங்கில் வல்லமை படைத்த இவர், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின்போது முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.
கடந்த 23-ந்தேதி தனது குடும்ப படத்தை சமூக இணைய தளத்தின் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு செய்தார். அதில் முகமது ஷமி, தனது மனைவி மற்றும் மகள் உடன் இருந்தார். முகமது ஷமி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். இதனால் அவரது மனைவி பர்தா அணிந்து நின்றிருக்க வேண்டும் என்று சில இணைதளவாசிகள் கருத்துக்கள் பதிவு செய்தனர். சிலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பின்னர் கருத்துக்கள் அதிக அளவில் பரிமாறும்போது அவரது மனைவி கட்டாயம் பர்தா அணிந்திருக்கனும். அவர் ஒரு முஸ்லிம் அல்ல. ஹசின் ஜகன் முன்னாள் கொல்கத்தா மாடல் அழகி என்று பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
இந்த கருத்துக்களை மொகமது ஷமி விரும்பவில்லை. இதனால் அந்த கருத்துக்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ‘‘என்னுடைய மனைவி மற்றும் மகள் என்னுடைய வாழ்க்கை துணை. நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எனக்குத் தெரியும்’’ என்று பதில் அளித்துள்ளார்.
மொகமது ஷமிக்கு முன்னாள் வீரர் மொகமது கயூப் ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டள்ள கருத்தில் ‘‘மொகமது ஷமியின் படத்திற்கு பதிவு செய்துள்ள கருத்துக்கள் மிகவும் வெட்கக்கேடானது’’ என்று கூறியுள்ளார்.