சசிகலா உடன் நடிகை ஸ்ரீதேவி சந்திப்பு!

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

மறைந்த ஜெயலலிதா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். அவரது மறைவை தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது.

இதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போயஸ் கார்டனில் தினந்தோறும் சந்திப்பு நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவை போயஸ் கார்டனில் நடிகை ஸ்ரீதேவி சந்தித்துள்ளார். நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நடிகர் அஜித் குமாரும் நேற்று மாலை போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.