மாதவிடாய் கோளாறை சரிசெய்யும் செம்பருத்தி!

மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு, வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் போன்றவை முக்கிய காரணமாக உள்ளது.

இதுபோன்ற முறையற்ற மாதவிடாய் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, செம்பருத்தி பூ ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.

மாதவிடாய் பிரச்சனை

4 செம்பருத்தி பூக்களை அரைத்து பசையாக செய்து கொள்ள வேண்டும். பின் இதை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூளாக்கி கொள்ள வேண்டும். பின் ஒரு தேக்கரண்டி அளவு செம்பருத்தி தூளை காலை மற்றும் மாலையில் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீராக நடைபெறும்.

இருமல் பிரச்சனை

15 செம்பருத்தி பூ இதழ்கள், 3 தளிரான ஆடாதோடை இலை ஆகிய இரண்டையும் சேர்த்துக் கசக்கி, அதை 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அதை வடிக்கட்டி, அதில் 1 /2 தேக்கரண்டி தேன் கலந்து, இரண்டு வேளைகள் 3 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இருமல்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

சிறுநீர் எரிச்சல் பிரச்சனை

4 செம்பருத்தி இலைகள் அல்லது 4 செம்பருத்தி மொட்டுகளை 2 டம்ளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகிவிடும்.

இதய பிரச்சனை

செம்பருத்தி பூவை பசுமையாக அல்லது உலர வைத்து பொடி செய்து, அதை பாலில் கலந்து காலை மற்றும் மாலையில் குடித்து வந்தால் இதயம் வலிமையாகி, இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.