தொப்பையை குறைக்கும் அற்புதமான உணவுகள்!

ஒவ்வொருவரும் தொப்பையைக் குறைக்க பல டெக்னிக்கைப் பயன்படுத்தி, வருகிறார்கள்.

இந்த முயற்சிகள் அனைத்துமே பலன் தரும் நல்ல விஷயங்களாக இருந்தாலும் அதனோடு தொப்பையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களை சாப்பிடும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொள்ளு ரசம்

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாதுஉப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக நிறைந்த கொள்ளு, நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் தன்மைக் கொண்டது.

இந்த கொள்ளுப் பருப்பை நீரில் ஊறவைத்து, அந்த நீரை அருந்தி வந்தாலே, உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.

தேவையான பொருள்கள்
  • கொள்ளு – 1 கப்
  • வரமிளகாய் – 3
  • தனியா – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 அல்லது 2 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1 அல்லது 2 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 1அல்லது 2
  • சின்ன வெங்காயம் – 8 (நறுக்கியது)
  • பூண்டு – 3 பல் நறுக்கியது
  • எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை

குக்கரில் கொள்ளிப் பருப்பை போட்டு, மூன்று கப் தண்ணீர் விட்டு, நான்கு விசில் வரும்வரை வைத்து எடுக்கவும்.

பின் வேகவைத்த கொள்ளு, வரமிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து, அதை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பின் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின் அதனுடன் அரைத்து வைத்த கொள்ளப் பருப்பை சேர்த்து, கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

கேழ்வரகு கஞ்சி

உடல் எடையைக் குறைக்கும் மிகச் சிறந்த உணவான கேழ்வரகில், விட்டமின் B, கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

தேவையான பொருள்கள்
  • கேழ்வரகு மாவு – ஒரு கப்
  • தண்ணீர் – 4 கப்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை

ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் தண்ணீர் எடுத்து அதை நன்றாக சூடு செய்ய வேண்டும். பின் கேழ்வரகு மாவை தோசை மாவின் பதத்தில், கரைத்து, அதை கொதிக்க வைத்த சுடு நீரீல் ஊற்றி கெட்டி ஆகாதவாறு நன்றாக கிளறி விட வேண்டும்.

பின் சிறிது நேரத்தில் மாவின் நிறம் மாறி, வாசம் வந்ததும், உப்பு சேர்த்து இறக்க வேண்டும்.

வறுபயறுகள்

உளுந்து, கம்பு, தினை, அலிசி விதை, ஆளி விதை இது போன்ற ஆரோக்கியமான தானியப் பயறுகள் உடல் எடையைக் குறைப்பதில் மிகவும் சிறந்த உணவுகளாக உள்ளது.

எனவே, இந்த வறுபயறுகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையை குறைப்பதோடு மட்டுமில்லாமல், சர்க்கரை நோயையும் குணப்படுத்துகிறது.

கல்யாண முருங்கைத்தழை

கல்யாண முருங்கைத் தழையானது, மிகுந்த கசப்புத் தன்மையும், உஷ்ணமும் நிறைந்தது. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்க உதவும் நார்ச்சத்து, கால்சியம், தாதுஉப்புக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனவே தினமும் காலையில் இந்த தோசை மாவில் கலந்து, தோசையாக செய்து சாப்பிட்டு வந்தால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, தைராய்டு பிரச்சனையை வராமல் தடுக்கிறது.

கொடம்புளி சூப்

50 கிராம் கொடம்புளியை, 300 மில்லி வெந்நீரில், இரவில் ஊறவைக்க வேண்டும். பின் 50 கிராம் கொள்ளுப் பருப்பையும் தனியாக வெந்நீரில் ஊற வைத்து, காலையில் அதை சூடு செய்து, வற்றியதும் அதை வடிகட்டிய சூப்பில் சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும்.

இதனுடன் 5 மி.லி தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பசி தூண்டப்பட்டு, செரிமானம் சீராக இருக்கும்