கணவன் பால் என்றால்…. மனைவி தண்ணீர்!

கணவன்- மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. அந்த உறவு எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

உதாரணத்திற்கு, கணவன் பால் என்றால் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல மனைவி இருக்க வேண்டும்.

ஏனெனில் வெண்மை நிறத்தில் இருக்கும் பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், அந்த தண்ணீரை தனியே பிரித்துக் காட்டும் குணம் அந்த பாலுக்கு இருப்பதில்லை.

அதே போல் அந்த தண்ணீருக்கும், பாலை தனியாக பிரித்து காட்டும் குணம் கிடையாது.

நாம் தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கும் போது, அதில் இருக்கும் தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்லும். அதை தாங்காத முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வருகிறது.

பின் பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பி வந்து விட்டது என்று அந்த பால் தன்னுடைய கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.

ஒரு வேளை பால் பொங்கி வரும் அந்த தருணத்தில் நாம் அதன் மீது தண்ணீர் தெளிக்கவில்லை என்றால் அந்த பால் கோபத்தில் பொங்கி எழுந்து கீழே ஊற்றி, சக்தி வாய்ந்த நெருப்பையே அணைத்துவிடும் தன்மைக் கொண்டதாக மாறிவிடுகிறது.

இதன் மூலம் ஒரு குடும்பத்தில் இருக்கும் கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் மட்டும் தான் அந்த குடும்பம் என்ற நெருப்பு அணையாமல் இருக்கும்.

கணவன் மனைவி என்ற வாழ்வில் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ளும் உணர்வு தான் அவர்கள் வாழ்க்கையின் வசந்தகாலமாக இருக்கும்.

நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே நமது வாழ்க்கையிம் மிகச் சிறந்த வரலாறு…..