இலங்கையின் முன்னாள் பிரதமர் காலமானார்!!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார்.

உடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவர் 1933ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி பிறந்துள்ளார். தனது 83ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார்.

ரத்னசிறி விக்ரமநாயக்க இலங்கையில் 2000 முதல் 2001 வரையும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை முன்னாள் பிரதமர் டி.எம்.ஜெயரட்ன நேரில் சென்று நலம் விசாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.