இந்திப்பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சல்மான் கான் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
மும்பை பன்வேல் பண்ணை வீட்டில் இன்று அவரது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் சல்மானோடு இணைத்து கிசுகிசுக்கப்பட்ட லுலியா வான்ட்டுர், பிரீத்தி ஜிந்தா, இஷா குப்தா, பிபாஷா பாசு, கரண் சிங் குரோவர் உள்ளிட்ட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
’மனிதத்துடன் இருப்போம்’ (Being Human) என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட சாக்லேட் நிற கேக்கை சல்மான் கான் வெட்டும் காட்சியுடன் அவரது பிறந்தநாள் விழாவில் தாங்கள் பங்கேற்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.