இராணுவத்திலிருந்து விலக 4,658 பேர் விண்ணப்பம்!

இராணுவ சேவையிலிருந்து விலச்செல்வதற்காக இம்மாதம் 31ஆம் திகதி வரை இராணுவத்தினருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 7 அதிகாரிகள் அடங்காலாக 4 ஆயிரத்து 658 பேர் உத்தியோகப்பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் ரொகான் செனவிரத்ன, 2 உயர் அதிகாரிகள், கடற்படையை சேர்ந்த 16 பேர் அடங்கலாக 424 சிப்பாய்களும் 195 விமானப்படை சிப்பாய்களும் படையிலிருந்து தாமாக விலகிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.