ரயில் சேவையை மேம்படுத்த 2017இல் பல்வேறு திட்டங்கள்!

ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக 2017ஆம் ஆண்டில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ.ஏ.பி ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

ரயில் மூலம் பொருட்களை எடுத்துச் செல்வது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தற்போது திருகோணமலையிலிருந்து மாஹோ வரை ரயில் மூலம் நிலக்கரி எடுத்துச் செல்லப்படுகிறது.

பிறீமா கோதுமை மாவை ரயில் மூலம் எடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தத்திலும் ரயில்வே திணைக்களம் கைச்சாத்திடவிருக்கிறது.

மேலும், எரிபொருளும் அதிகளவில் எடுத்துச் செல்லப்படவிருக்கிறது. இந்தியாவின் கடனுதவியுடன் 30 எண்ணெய்த் தாங்கிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.

பொருட்களை எடுத்துச் செல்வதன் மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்டுவது இதன் நோக்கமாகும்.

புதிதாக ஒன்பது பவர் செட்களும், 12 எஞ்சின்களும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.