அந்தமானில் இன்று அதிகாலை 2.51 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமானில் இன்று அதிகாலை 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை.
முன்னதாக கடந்த 23ம் தேதி காலை 10.26 மணிக்கு அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்தது. அதற்கும் முன்பு கடந்த 4ம் தேதி 4.8 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த மாதத்தில் மட்டும் இதுவரை மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் அந்தமானுக்கு படையெடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் அங்கு தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.