ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் பாதிக்கப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது.
56-வது டெஸ்டில் விளையாடும் அசார்அலிக்கு இது 12-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது சதத்தை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2-வது முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தேனீர் இடைவேளை வரை மழை பாதிப்பு இருந்தது.
அப்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து இருந்தது. அசார்அலி 112 ரன்னும், ஆசாத்சபீக் 48 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.