சுசந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில்!

டெங்கு நோய் காரணமாக நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுசந்திகா ஜயசிங்க தொடர்ந்தும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுசந்திகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் என தியத்தலாவ வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் அமரகோன் தெரிவித்துள்ளார்.

சுசந்திகா ஜயசிங்க, நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக தியத்தலாவவிற்கு சென்றிருந்த போதே சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.