மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உடல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.
மேலும், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றைய தினம் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் உடல் வைக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் சென்றிருந்தனர்.
இந்த மாதம் 30ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவரின் இறுதிக் கிரியைகள் 31 ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் நேற்று காலை காலமானார்.