எம்.பி.க்களுக்கு சம்மன் பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை: மம்தா!

ரோஸ் வேலி (Rose Valley) சிட் பண்ட் முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேல்சபை எம்.பி. சுதிப் பண்டோபாத்யாய், எம்.பி. தபாஸ் பால் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி சிபிஐ வரும் 30-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. மத்திய அரசை எதிர்க்கும் செயலை திரிணாமுல் காங்கிரசால் நிறுத்த முடியாது’’ என்றார்.

நேற்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ‘‘மோடியின் நடவடிக்கையால் இந்தியா அறிவிக்கப்படாத எம்ர்ஜென்சியை சந்தித்து வருகிறது. அனைத்து பிரிவு சமூகமும் மோடி வந்து கொண்டிருக்கிறார். மோடி வந்து கொண்டிருக்கிறார் (Gabbar is coming, Gabbar is coming) என்று அஞ்சுகிறார்கள். நாடு இதுபோன்ற மிரட்டல்களால் செல்லக்கூடாது என்று கூறியிருந்தார்.

மேலும், நோட்டு ஒழிப்பு குறித்து கூறுகையில் ‘‘இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருப்போம். அத்துடன் 50 நாட்கள் முடிவடைகிறது. அதனடிப்படையில் நாங்கள் முடிவு செய்வோம்’’ என்றார்.