தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவிடம் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலக மற்றும் பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை உறவினர்களுக்கு வழங்கியதாக விமல் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் 45 வாகனங்கள் இவ்வாறு உறவினர்களுக்கும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் விமல் வீரவன்ச வழங்கியதாக தெரிவிப்படுகிறது.
இந்த விடயம் குறித்து விசாரணை நடாத்த பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களைக் காண்பித்து விமல் வீரவன்ச விசாரணைகளுக்கு முன்னிலையாகவில்லை.
இது தொடர்பில் கோட்டே நீதிமன்றிற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் விமல் வீரவன்சவிற்கு அறிவித்ததன் பின்னரே நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்காக முன்னிலையாகியிருந்தார்.
நேற்று காலை 9.00 மணிக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையான விமல் வீரவன்சவிடம் மாலை வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சுமார் நாற்பது ஐந்து அரச வாகனங்களை தமது உறவினர்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக வழங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை நடத்தும் நோக்கில் இன்றைய தினமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.