நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதாகவும், அது எவருக்கும் உரிமையான அரசாங்கம் அல்ல எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால், நல்லாட்சியை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார். பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களை கொண்ட அரசாங்கம்.
இதனால், இந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளை பாதுகாகக் வேண்டும். ஜனவரி 8ஆம் திகதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.