இந்தியா பயணமாகிறது இலங்கை மீன்பிடித்துறை குழு!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் இந்தியாவின் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது

இதற்காக இலங்கையின் குழு ஒன்று நாளை இந்தியா செல்லவுள்ளது. இலங்கையின் கடற்தொழில் அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கலந்துரையாடலில் இலங்கை கடற்தொழில் அமைச்சர் செயலாளர், கடல் தொழில் திணைக்களத்தின் செயலாளர் மற்றும் கடற்படையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.