நாட்டினை விற்கும் அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் ஒரு பேரணியினை நடத்த தயார் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவில் தொடர்ச்சியாக 5 மணிநேர விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்கமானது ஓய்வின்றி ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வருகின்றது.
இதனை விடுத்து கொழும்பில் டெங்கு நுளம்புகளை அழிப்பதில் கவனம் செலுத்தி இருந்தால் 5,000 ற்கும் மேற்பட்ட மக்களை காப்பாற்றி இருக்கலாம். அது நாட்டிற்கு பயனான ஒன்றாக இருக்கும்,
மேலும் எதிர்வரும் ஜனவரி 22ம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் இனவாதம் மற்றும் நாட்டினை விற்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக பேரணி ஒன்றினை நடத்த தீர்மானித்துள்ளதாக கூறினார்.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவினால் நேற்று நிதி மோசடி பிரிவில் விமல் வீரவன்ச முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.