‘கிறிஸ்மஸ் அதிசயம்!’ சிறிய விமானம் அவசரமாக தரையிறக்கம்!

அல்பேர்ட்டா–வோர்ட் மக்முரே விமான நிலையத்தில் நால்வருடன் கூடிய சிறிய விமானம் ஒன்று அவரச தரையிறக்கம் செய்யப்பட்டது.

எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது. 5.35மணியளவில் சிறிய விமானம் ஒன்றில் இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதாக வூட் பவலோ அவசர கால மேலாண்மை கிளையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

எட்டு தீயணைப்பு டிரக்குகள் மற்றும் 3 அம்புலன்ஸ்கள் சிறிய விமானத்தை நோக்கி விரைந்தன. ஆனால் விமானம் எங்கு தரையிறங்கும் என்பது அறியாத நிலை.

விமானம் Cessna 208 Caravan எனப்படும் தனிப்பட்ட இயக்கத்தினருக்கு சொந்தமானது. கம்ரோஸ் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு வோர்ட் மக்முரே நோக்கி சென்று கொண்டிருந்தது.

விமானம் விமானநிலைய ஓடு தளத்திற்கு சென்றடைய கூடிய நிலைமையில் இல்லாததை அறிந்து கொண்ட விமானி பாதுகாப்பான இடத்தில் விமானத்தை தரையிறக்க ஆராய்ந்து கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் தரையிறக்க எண்ணிய போது நெடுஞ்சாலை பிசியாக காணப்பட்டது. விமான நிலையத்தை அண்மித்து ஓடு தளத்தை அண்மிக்க முன் சேவை வீதியில் இறங்கியுள்ளது.

விமானிக்கும் பயணிகள் மூவருக்கும் புடைப்புக்கள் மற்றும் கீறல்கள் ஏற்பட்டது. இச்சம்பவம் ஒரு’ கிறிஸ்மஸ் அதிசயம்’ என கூறப்படுகின்றது.

ஏனெனில் விமானம் இயக்க சக்தியை இழந்த நிலையை அடைந்துவிட்டது. விமானம் நெடுஞ்சாலைக்கு அண்மையில் சென்றிருந்தால் மின் கம்பத்தை மோதியிருக்கும்.