இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் பொங்கலுக்கு பைரவா படம் ரிலீஸ் ஆகிறது. அவரோடு நடிக்க பலருக்கும் ஆசை இருக்கும். புகைப்படம் எடுக்க விருப்பம் இருக்கும்.
அதுபோல் காமெடி நடிகர் பாலசரவணன் சமீபத்திய பேட்டியில் விஜய் பற்றி பேசியுள்ளார். இவர் டிவி சீரியல் மூலம் சினிமாவிற்கு வந்தவர்.
அவர் சொல்லியதாவது எனக்கு மிக பக்கபலமாக இருந்தவர் ஜி.வி.பிரகாஷ். அவர் எனது நெருங்கிய நண்பர்.
பைரவா படம் அன்று நான் நடித்த அதே கண்கள், புரூஸ் லி ஆகிய இரண்டு படங்கள் வெளிவருகிறது. விஜய் படத்தோடு சேர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
விஜய் படம் என்றாலே எப்போதும் மாஸ் ஓப்பனிங் தான். எல்லா ஷோக்களும் ஓபன் ஷோக்கள் தான். நான் நைட் ஷோ போகப்போகிறேன்.
எனக்கு விஜய் பிடிக்கும். எல்லாரையும் போல அவரோடு நடிக்க ஆசை எனக்கும் உள்ளது. அவருக்காக ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளேன். முதலில் நான் நல்ல காமெடி நடிகனாகி, பின் நல்ல இயக்குனராகி பின் அவரை வைத்து படம் எடுப்பேன் என கூறியுள்ளார்.