சினிமா பிரபலங்கள் நடிப்பு என்பதை தாண்டி பல துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா அவர்களின் கட்சியில் இருந்த ஆனந்தராஜ் அண்மையில் அதில் இருந்து நீங்குவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருடைய செல்போனுக்கு கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். மூலம் வந்தது. இதையொட்டி ஆனந்தராஜ் நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அவர், எனக்கு கொலை மிரட்டல் வந்ததையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் கொலை மிரட்டல் குறித்து கேட்டறிந்தனர்.
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலும் கொலை மிரட்டல் குறித்து விசாரித்தார். எனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.