உலகம் வேகமாக ஒடும் சூழலில் மனிதர்களும் அதனுடன் வேகமாக ஓடுகிறார்கள். முக்கியமாக சாப்பாடு விடயத்தில் தற்போது பலரும் அதிக அக்கறை எடுத்துகொள்வதில்லை.
அதிலும், பள்ளிக்கு போகும் சிறுவர்கள் முதல் வேலைக்கு போகும் நபர்கள் வரை காலையில் சிற்றுண்டியை சரியாக சாப்பிடாமலும் மற்றும் தவிர்த்தும் வருகிறார்கள்.
இது உடலில் பல பிரச்சனைகளை ஏற்ப்படுத்தும் என்பது தெரியுமா?
காலை சிற்றுண்டி ஏன் முக்கியம்?
இரவு உணவுக்கு பின்னர் 6லிருந்து 10 மணி நேரம் வரை ஏதும் சாப்பிடாமல் இருக்கிறோம். அதனால் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாக செயல்ப்பட உடலுக்கு உணவு நிச்சயம் தேவைப்படுகிறது.
அதிலும் கார்போஹைட்ரேட், புரதம், மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காலை சிற்றுண்டியில் இருக்கவேண்டியது அவசியமாகும்.
மேலும், மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக்கிறது.
காலை சிற்றுண்டியை சாப்பிடாமல் தவிர்த்தால்
காலை சிற்றுண்டியை தவிர்க்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சோர்வு, நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகள் வரும்
காலை சிற்றுண்டி சாப்பிடாத இளம் வயதினருக்கு குமட்டல், சோர்வு, அல்சர், முடி உதிர்தல் போன்ற தொல்லைகள் ஏற்ப்படும்.
காலை உணவை தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதய நோய்கள், மனசோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்ப்படலாம்.