வீரவங்சவை தகாத வார்த்தைகளால் திட்டிய மஹிந்த! காரணம் என்ன? கொழும்பு ஊடகம் தகவல்

கோத்தபாயவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு கூறிய வீரவங்சவை கெட்ட வார்த்தையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டியதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஸவை நியமிக்க வேண்டும் என விமல் வீரவங்ச, மஹிந்த ராஜபக்ஸவிடம் அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களின் பெரும்பான்மை விருப்பம் கோத்தபாயவுக்கு கிடைக்குமா என மஹிந்த வினவியுள்ளார்.

அது சரியானால் செய்யக்கூடிய ஒரு விடயம் எனவும், கோத்தபாயவுக்கு இடம் வழங்கிவிட்டு நீங்கள் ஓய்வு பெற்று ஆரோக்கியமாக இருக்கலாம் என விமல் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட மஹிந்த உச்சகட்ட கோபமடைந்துள்ளார். “நீ என்னை முட்டாள் என நினைத்தாயா? நான் பெந்தர ஆற்றின் அடுத்த பக்கம் உள்ள ஒருவன். மேலும் சில கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி மஹிந்த இங்கு பதிலளித்துள்ளார்.

தங்களை சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கத்தில் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் “நீ எல்லாம் கூறியதனால் நான் அரசியலுக்கு வந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நீ கூறுவதனால் நான் அரசியலை விட்டு சென்று விடுவேன் என்றும் நினைத்து விடாதே…. யாரையும் என் முதுகின் பின்னால் செல்வதற்கு இடமளிப்பேன் என எண்ணிவிட வேண்டாம் எனக் கூறிய மஹிந்த தனது அறைக்கு சென்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் இருந்த பலரிடம் தான் கூறியதனை மஹிந்த பெரிய பிழையாக எடுத்துக் கொண்டுள்ளார் என விமல் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த சம்பவத்தை கடந்த வாரம் பத்திரிகை ஆசிரியரிடம் ஒருவர் கூறியுள்ள நிலையில் அவர் மேலும் சிலரிடம் இந்த விடயத்தை கூறியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.