ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பேஸ்புக் பயனாளர்களுக்கு அறிவுறுத்தல்!

2016ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சுமார் 2,200 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை தெரிவித்துள்ளது.

வேறு நபர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி பேஸ்புக் பக்கங்கள் திறக்கப்படுகின்றமை தொடர்பிலேயே அதிக இணைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

தனிநபர்கள் தங்களின் பேஸ்புக் ஊடாக முறைப்பாடு பதிவு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேஸ்புக்கில் தங்கள் புகைப்படங்களை வெளியிடும் போது பாதுகாப்பு கருதி “நண்பர்களுக்கு மாத்திரம்” என்ற தேர்வினை தெரிவு செய்து புகைப்படங்களை பதிவிடுமாறு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முறை போலி கணக்குகளில் வேறு நபர்களின் புகைப்படம் செல்கின்றமை மற்றும் பிழையான நபர்களுக்கு புகைப்படம் செல்வதனை தவிர்ப்பதற்கும் உதவியாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.