காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நத்தார் மரம் ஜனவரி முதலாம் நாள் வரை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்.
ஜனவரி மாதம் முதலாம் நாள் இந்த நத்தார் மரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்படுமென ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவால் உலகின் மிகப்பெரிய நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முதலில் அதிருப்தி வெளியிட்டதையடுத்து, நத்ததார் மரத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டன.
பின்னர் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.
இதையடுத்து, நத்தார் மரத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இணக்கம் வெளியிட்டதையடுத்து, மரத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு கடந்த 24ஆம் திகதி மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.