இன்றைய ராசி பலன்கள் 31.12.2016

  • மேஷம்

    மேஷம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர் கள். பிள்ளைகளின் பெருமை களை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். உங்களின் தனித்தன்மையை பின்பற்றுவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • கடகம்

    கடகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.

  • கன்னி

    கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • துலாம்

    துலாம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

  • தனுசு

    தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். தடைகள் உடைபடும் நாள்.

  • மகரம்

    மகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

  • கும்பம்

    கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

  • மீனம்

    மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.