ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே, 2004 ஆம் ஆண்டில் அவருக்கு தங்கத்தாரகை எனும் டுபாக்கூர் விருதை அளித்து ஏமாற்றினார்கள்.
அப்போது, ஐநா சபையே விருது வழங்குவதாகக் கூறி, நாளிதழ்களில்
அதிமுக அமைச்சர்கள் 100 பக்கங்களில் முழுபக்க விளம்பரம் கொடுத்தார்கள்.
அதை ஐநா விருதென்று அப்போது ஜெயலலிதா ஏமாளித்தனமாக நம்பினார்.
உக்ரைன் நாட்டில் உள்ள சர்வதேச மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்குவதாகவும்,
அது ஐ.நா சபையின் அதிகாரப்பூர்வமான ஆலோசனை அமைப்பு என்றும் பீலா விட்டார்கள்.
ஆனால், அந்த அமைப்பு டுபாக்கூர் அமைப்பாகும். ஐநாவின் ஆலோசனை அமைப்புகளின் பட்டியலில் அப்படி ஒரு அமைப்பே இல்லை.
தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்புக் கூட ஐநா பட்டியலில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு தங்கத்தாரகை விருது வழங்கிய அமைப்பு இல்லவே இல்லை.
இறந்த பின்பு நோபல் பரிசு ஜெயலலிதாவுக்கு வழங்கவேண்டும் என்று கூறுகின்றனா்.
நோபல் பரிசு அமைப்பின் சட்ட விதிகளின் படி – உயிரோடு உள்ளவர்களுக்கு மட்டும்தான் நோபல் பரிசு வழங்கப்படும். இதனை நோபல் சட்டவிதி, பிரிவு 4 தெளிவாகக் கூறுகிறது
நோபல் பரிசினை அறிவிக்கும் போது உயிரோடு உள்ள ஒருவர் – அந்தப் பரிசு வழங்கும் போது உயிரோடு இல்லாவிட்டால் மட்டுமே – இறந்தவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.
விவாசயிகள் தினம் ஏற்கனவே டிசம்பர் 23 அன்று மறைந்த பிரதமர் சரண்சிங் அவர்களின் நினைவாக ஏற்கனவே கொண்டாப்பட்டு வருகிறது…
பாரதரத்தினா விருது ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறைவாசம் அடைந்தவர்களுக்கு கொடுப்பது மரபு அல்ல.
அதுவும் மறைந்த முதல்வர் மேல் 15 க்கு மேற்பட்ட ஊழல் வழக்குகள் போடப்பட்டு இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஜெயலலிதா மீது பற்றும், உண்மையான விசுவாசம் கொண்ட அடுத்தக்கட்ட தலைவர்கள் எவரும் இல்லை என்பதே உண்மை.
சசிகலா அம்மாவும், அவர்களது அடிமை அமைச்சா்களும், கொத்தடிமை பொதுக்குழு உறுப்பினா்களும் செய்த காரியம்தான் இது.
ஜெயலலிதா இருந்தபோது, அவரை வெளி உலகுக்கு காட்டாமலேயே, மாதம் மும்மாரி மழை பெய்கிறது.
தமிழ்நாடும், நாட்டு மக்கள் உங்கள் ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளனா் என்று கூறி ஏமாற்றி வந்தனா்.
அவா் இறந்து விட்டார். அவர் மீது நீங்கள் உண்மையான அன்பு வைத்துள்ளீா்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இறந்த பின்பும் அந்த அம்மையாரை ஏமாற்ற வேண்டாமே.