கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்! கொழும்பு ஊடகம் தகவல்

நாட்டின் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் பிரதான தரப்பு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பு போராட்டத்தில் வெற்றி பெறுவதற்து அதிகம் இடம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய சில காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் திரைக்கு பின்னால் உள்ள சில தலைவர்களின் எதிர்பார்ப்பு சாத்தியமாகும் அறிகுறி காணப்படுகின்றது.

சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் சில தரப்பு ஈடுபட்டு வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்காக ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர் உட்பட பல்வேறு தரப்பினரும் கூட்டாக இணைந்து செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காகவும், விசேடமாக தற்போது இழக்கப்பட்டு வருகின்ற பௌத்த மக்களையும் கரு ஜயசூரியவினால் இணைத்துக் கொள்ள முடியும் என குறித்த தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்தியா, அமெரிக்க உட்பட பிரதான நாடுகள் சிலவற்றிற்கு முன்னாள் அமைச்சரின் இது தொடர்பில் தற்போதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமித்தவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் அந்த கட்சியின் அரசியலமைப்பிற்கமைய கிடைக்கவுள்ள நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமைத்துவத்தில் சஜித் பிரேமதாஸ மற்றும் நவீன் திஸாநாயக்கவை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியின் 15 பேருக்கு குறித்த ஊடக நிறுவத்தின் முழுமையான ஆதரவு கிடைப்பதாகவும், இந்த திட்டம் நீண்டகாலமாக திட்டமிடப்படுவதாகவும், எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வருவது இவர்களின் திட்டமாகும்.

19 அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கமைய நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமருக்கு குறைப்பாடு ஏற்பட்டால் சபாநாயகர் நாட்டின் பிரதமராக நியமிக்கப்படலாம் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.