சுவிட்சர்லாந்தில் பிரபல ஹோட்டல் ஒன்று தீக்கரையாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Arosa நகரத்தில் உள்ள the Posthotel Holiday Villa என்ற ஹோட்டலிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு பொலிசார், தீயணைப்பு துறையினர், மருத்துவ சேவை என அனைவரும் விரைந்துள்ளனர்.
அதிக புகை நச்சு தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நான்கு பேர் ஹெலிகாப்டர் மூலம் Chur பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், புகையால் பாதிக்கப்பட்ட 10 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தை அடுத்து ஹோட்டலில் தங்கியிருந்த 150 விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள வேறொரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதி உள்ள மக்களை வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை முடி வைக்குமாறு பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது, தீயை கட்டுப்படுத்தும் பணியில் பொலிசார், தீயணைப்பு துறையினர் என 100 பேர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீட்பு பணியில் 3 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே அருகில் ஹோட்டல் அமைந்துள்ளதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனினும், தீ எற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.