சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை தற்போது அவரின் நெருங்கிய தோழியான சசிகலா ஏற்றுள்ளார்.
சசிகலா பொதுச் செயலாளர் ஆனதற்கு அதிமுக தொண்டர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் அதிமுக-வில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஆங்காங்கே அதிமுக கிளை கழகங்கள் கலைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா இன்று நேரடி விஜயம் தந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா நினைவிடத்தில் திருவள்ளூர் மாவட்டம் காரனோடையைச் சேர்ந்த சுவாதி ஆனந்த் என்ற அதிமுக தொண்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.