நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரா கோவில் கட்டி பராமரித்து வருகிறார். பொதுமக்களிடையே அந்த கோவில் மிகவும் பிரபலமாகி உள்ளது.
இந்த கோவிலை கட்டி நாளை (1-ந்தேதி)யுடன் 8 ஆண்டுகள் ஆகிறது. புத்தாண்டு அன்று லாரன்ஸ் தனது டிரஸ்ட் மூலம் ஆதரிக்கும் ஏழை குழந்தைகளுடன் புத்தாண்டை ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் கொண்டாடுகிறார். கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் அன்னதானம் வழங்குகிறார்.
லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. மேலும், பி.வாசு இயக்கத்தில் ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.