-
மேஷம்
மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை கள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
-
மிதுனம்
மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலை களை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
-
கடகம்
கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. நன்மை கிட்டும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: நட்பு வட்டம் விரி யும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதா ரர்களின் பிரச்சனை தீரும். உழைப்பால் உயரும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினரு டன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சிறப்பான நாள்.
-
தனுசு
தனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உற்சாகமான நாள்.
-
மகரம்
மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
-
கும்பம்
கும்பம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.