பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 125 கோடி மக்களும் நேர்மை தான் முக்கியம் என நிரூபித்துள்ளதாக பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்த மோடி, கடந்த 50 நாட்களில் நாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்தியாவை புதிதாக கட்டமைக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ரொக்கமற்ற பரிவர்த்தனையே சிறந்த திட்டம் என்றும் மோடி குறிப்பிட்டார்.
அளவுக்கு அதிகமான ரொக்க பரிவர்த்தனையே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்தாவது,
- புத்தாண்டில் வங்கி சேவைகள் சீராகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
- கிராமப்புறங்கள், அதிக பாதிப்புள்ள பகுதிகளில் வங்கிகள் இயல்பு நிலைக்கு திரும்ப தூரித நடவடிக்கை எடுக்கப்படும்.
- நகர்ப்புற ஏழைகளுக்கு புதிய வீட்டுவசதி திட்டம், பெண்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- கருப்பு பணம் பதுக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவசாய கடன்களுக்கு 2 மாத வட்டியை அரசே செலுத்தும். கூட்டுறவு வங்கிகள், வேளாண்மை சங்கங்களில் கடன் வாங்கியவர்களுக்கு இச்சலுகை பொருந்தும்.
- கர்ப்பிணிகளுக்கு பேறு காலத்தில் ரூ.6,000 உதவி தொகை வழங்கப்படும்.
- சிறு, குறு வணிகர்களுக்கு உத்தரவாதம் இல்லாத கடன் ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படும்.