ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
சிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டு மரண தண்டனைகள், பாலியல் தொந்தரவுகள் என கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர் ஐஎஸ் தீவிரவாதிகள்.
இவர்களுக்கு எதிராக களமிறங்கியுள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த இயக்கத்தின் தலைவரான அபுபக்கர் அல்பாக்தாதி அமெரிக்கா தாக்குதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியானது.
இதனை அமெரிக்கா உறுதி செய்யாத நிலையில், அல்பாக்தாதி உயிருடன் இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக பென்டகனின் செய்தி தொடர்பாளர் பீட்டர் குக் கூறியுள்ளார்.
மேலும் இவரது நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அல்பாக்தாதி ஐஎஸ் தலைவர்களின் உயிரிழப்புகளால் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவரின் தலைக்கு அமெரிக்கா 25 மில்லியன் டொலர்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.