யாழ். மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கி வழங்கும் புதிய திட்டம் !

யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முதல் முன்னெடுக்கப்படும்.

மழை நீரை தூய்மைப்படுத்தி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.