2016 இற்கான மூன்றாம் தவணை விடுமுறை காலம் முடிவடைந்து நாளைய தினம் 2017 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேவேளை க.பொ.த சாதாரண தரப்பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் காரணமாக 68 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2017 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையானது ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.