புதுவருட விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி!

புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 179 மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒப்பிடுகையில், புதுவருடத்தில் கொழும்பு தேசிய மருத்துமனையில் பதிவாகியுள்ள விபத்துக்களின் எண்ணிக்கிகை நூற்றுக்கு 13 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீதி விபத்துக்களின் காரணமாக நேற்று 7 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.