நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 4 வருடங்களுக்காக 17 இலட்சம் மெட்ரிக் தொன் எரிபொருள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜீ.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் வீதத்தைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எரிபொருளைக் களஞ்சியப்படுத்தும் வசதிகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முத்துராஜவல, கொலன்னாவ, சப்புகஸ்கந்த பகுதிகளில் மேலதிக எண்ணெய் தாங்கிகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜீ.ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.