புதிய அரசியலமைப்பின் ஊடாக இந்த வருடம் தீர்வு : சம்பந்தன் நம்பிக்கை!

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலச் சந்ததியினருக்காக பன்முகத் தன்மைகளை எவரும் தடையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என அவர் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்காலச் சந்ததியினருக்காக அமைதியான சௌபாக்கியம் மிக்க தேசம் ஒன்றை இதன் மூலமே கட்டியெழுப்ப முடியும் என்று அவர் தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.