மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை கண்டறிவதற்கு குற்றவியல் மத்தியஸ்த ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்படும்
இந்த தகவலை விசேட வேலைத்திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இன்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பிரேரணை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் பணத்தை சூரையாடியவர்களிடமிருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கான சட்ட ஏற்பாடுகள் இலங்கையின் சட்டத்தில் இல்லை.
குற்றவாளிகளாக இனங்காணப்படுகின்றவர்களுக்கு சிறை தண்டனையுடன் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. எனினும் அவர்களால் சூறையாடப்பட்ட பொது மக்களின் பணம் மீளப் பெறப்படுவதில்லை.
எனவே, மக்களின் பணத்தை மீண்டும் அவர்களிடம் பறிமுதல் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.