அரிசி விலையை நினைத்த நினைத்தவாறு அதிகரிக்க இடமளிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அரிசி விலை உயர்வினால் பொதுமக்கள் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்நோக்கியுள்ளனர். ஒவ்வொரு காரணங்களைக் கூறிக்கொள்ளாது அரிசி விலையை குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இன்று சில மாகாணங்களின் நெல் வயல்களில் என்ன நடக்கின்றது என்பது பற்றி ஆராய வேண்டும். நெல் வயல்களை மண் கொண்டு நிரப்பி கட்டடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதன் காரணமாக விவசாய நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதில்லை. அந்தந்த பகுதிகளில் நெல் வயல்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென சம்பந்தன் கூறியுள்ளார்.